திகில் பட ரசிகர்களை மிரளவைக்க போகும் கீர்த்தி சுரேஷ்!

Last Updated: செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (19:44 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வரும்  கீர்த்தி சுரேஷ். குறிப்பாக 'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வருகிறார்கள் .


 
அந்த அளவிற்கு அற்புதமான நடிப்பை மகாநடி படத்தில் வெளிப்படுத்தியிருந்தார். இதற்காக சமீபத்தில் தான் இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருது கீர்த்தி சுரேஷ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தென்னிந்திய சினிமாவிற்கே கீர்த்தி பெருமை சேர்த்துள்ளார். 
 
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், அறிமுக இயக்குனர்  ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் புதுப்படமொன்றில் நடிக்கவிருக்கிறார். க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகவுள்ள இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.   கதாநாயகியை மையமாக கொண்டுள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில்  வரும் செப்டம்பர் மாதம்  துவங்கவுள்ளனர். 
 
எனவே கூடிய விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றிய விபரங்கள் மற்றும் படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :