இவ்ளோவ் பயமா? தடுப்பூசி போடும்போது குழந்தை போல் அழுத ராய் லட்சுமி - வீடியோ

Papiksha Joseph| Last Updated: வெள்ளி, 25 ஜூன் 2021 (11:17 IST)

தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.
பிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது. இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. தற்போது சிண்ட்ரல்லா எனும் படத்தில் துளசி என்ற ஏழை பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை ராய் லட்சுமி அதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் ஊசி போட்டுக்கொள்ள குழந்தை போல் பயந்து நடுங்கி அழுதேவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :