1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 17 பிப்ரவரி 2021 (21:55 IST)

தனுஷ் 43 படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர் ..குவியும் வாழ்த்து

thanu
தனுஷ் நடித்துவரும் ‘D43' படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுவரும் நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

தனுஷ்43 படத்தை கார்த்திக் நரேன் இயக்கிவருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் புகழ் மாளவிகா மோகனன் நடித்துவருகிறார்.

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது.   ஏற்கனவே நடிகர் தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படங்களையும் தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களுக்கான வெளியிட்டது.

இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் அவ்வப்போது கேட்டுவந்தனர். இந்நிலையில், மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் சிறுவயது கதாப்பாத்திரத்தில் நடித்த மகேந்திரன்( குட்டிபவானி) தனுஷ் 43 படத்தில் இணைந்துள்ளார். இத்தகவலை தனுஷ்43 படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து திறமையை வெளிப்படுத்திவரும் மகேந்திரனுக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மகேந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.