இயக்குனர் சங்கத்தேர்தல் – இமாலய வெற்றி பெற்ற ஆர் கே செல்வமணி !

Last Modified திங்கள், 22 ஜூலை 2019 (10:37 IST)
நேற்று நடைபெற்ற இயக்குனர் சங்கத் தேர்தலில் இயக்குனர் ஆர் கே செல்வமணி இமாலய வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட இயக்குனர் பாரதிராஜா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்ய ஜூலை 21ஆம் தேதி தேர்தல் நடத்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனையடுத்து இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிட இயக்குனர்கள் அமீர், ஜனநாதன் உள்பட ஒருசில இயக்குனர்கள் விண்ணப்பம் தாக்கல் செய்திருந்தனர்.

தேர்தல் நடத்தும் அதிகாரி ஒருதலைபட்சமாக நடந்துகொள்கிறார் என்றும் அவர் தலைமையில் நடக்கும் தேர்தல் முறையாக நடக்க வாய்ப்பில்லை எனவும் கூறி அமீர் அணியினர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதையடுத்து நேற்று நடந்து முடிந்த தேர்தலில் இயக்குனர் பதவிக்குப் போட்டியிட்ட ஆர் கே செல்வமணி 1386 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வித்யாசாகர் 100 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். பொதுச்செயலாளர் பதவிக்கு ஆர்.வி.உதயகுமாரும், பொருளாளர் பதவிக்கு பேரரசுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :