வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 11 ஜூலை 2019 (20:22 IST)

இயக்குனர் சங்க தேர்தல்: 2 முக்கிய இயக்குனர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட இயக்குனர் பாரதிராஜா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்ய ஜூலை 21ஆம் தேதி தேர்தல் நடத்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனையடுத்து இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிட இயக்குனர்கள் அமீர், ஜனநாதன் உள்பட ஒருசில இயக்குனர்கள் விண்ணப்பம் தாக்கல் செய்திருந்தனர்.
 
இந்த நிலையில் இயக்குனர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கான இயக்குனர் அமீரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தலைவர் பதவிக்கு அமீர் அணியின் சார்பில் போட்டியிட விண்ணப்பித்திருந்த இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் தாக்கல் செய்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டுள்ளதால் இயக்குனர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இயக்குனர் சங்க தலைவர் பதவிக்கு இயக்குனர்கள் பி.வாசு , ஜனநாதன், கே. எஸ்.ரவிக்குமார், அமீர் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது ஜனநாதன், அமீர் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதால் பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் ஆகிய இருவர் மட்டுமே போட்டியில் உள்ளனர். வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வரும் 13ஆம் தேதி  வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது