வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: வெள்ளி, 16 மார்ச் 2018 (17:04 IST)

“திரைத்துறையை ஒழுங்கமைக்க வேண்டும்” – ஆர்.கே.செல்வமணி கோரிக்கை

‘திரைத்துறையை ஒழுங்கமைக்க வேண்டும்’ என தமிழக அரசுக்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.


 
சினிமாவில் நடைபெற்றுவரும் ஸ்டிரைக் குறித்துப் பேசுவதற்காக நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் இயக்குநரும், பெப்சியின் தலைவருமான ஆர்.கே.செல்வமணி. தயாரிப்பாளர் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பெப்சி ஆதரவு தரும் என்று தெரிவித்த அவர், திரைத்துறையை தமிழக அரசு ஒழுங்கமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

“நேரடியாக 2 லட்சம் பேர், மறைமுகமாக 3 லட்சம் பேர் என மொத்தம் 5 லட்சம் பேர் சினிமாவால் வாழ்ந்து வருகிறார்கள். அரசு, இதையும் முக்கிய தொழிலாகக் கருது, தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும். எங்களுக்கு வரிவிலக்கோ, மானியமோ வேண்டாம். திரைத்துறையை முதலில் தமிழக அரசு ஒழுங்கமைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.