1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 15 மார்ச் 2018 (19:28 IST)

அண்ணன் தம்பியாக நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர். - ராம்சரண்

ராஜமெளலி இயக்கும் படத்தில் ஜூனியர் என்.டி.ஆரும், ராம்சரணும் அண்ணன் – தம்பியாக நடிக்கின்றனர்.
 
‘பாகுபலி’ படத்தைத் தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம்சரணை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் எஸ்.எஸ்.ராஜமெளலி. வருகிற அக்டோபர் மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் எனத் தெரிகிறது. டிவிவி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. சோசியல் ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகும் இந்தப் படத்தில், ஜூனியர் என்.டி.ஆரும், ராம்சரணும் அண்ணன் – தம்பியாக நடிக்கிறார்கள்.