ஐசியுவில் கேக் வெட்டி திருமண நாள் கொண்டாடிய பாடகர் எஸ்.பிபி
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கவலைக்கிடமாக இருந்தாலும் தற்போது அவரது உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக சீராகி வருகிறது.
மேலும் அவர் சமீபத்தில் கண்விழித்து தனது மகன், மகள், உள்ளிட்டோர்களை அடையாளம் கண்டு கொண்டதாகவும் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு தருவதாகவும் செய்திகள் அவ்வப்போது வெளிவந்தது
மேலும் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகமும் எஸ்பிபி சரண் அவர்களும் தினசரி அப்டேட்களை கொடுத்து வந்தனர். இதிலிருந்து எஸ்பிபி அவர்கள் கடந்த சில நாட்களாக நல்ல முன்னேற்றத்தை அடைந்து வந்தார் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில் வரும் திங்கட் கிழமை அன்று நல்ல செய்தி வெளியாகும் என சரண் தெரிவித்திருந்த நிலையில், இன்று எஸ்.பிபி தனது கைப்பட மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள்,மற்றும் செவிலியர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.. ’’அதில் ஐ ல்வ் யூ ஆல் ‘’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இன்று எஸ்.பி.பாலசுப்பிரமணியம் – சாவித்ரிக்கு திருமணம் நாள் என்பதால் ஐசியுவிலேயே கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்தக் கேக் வெளியிலிருந்து வாங்கி வரப்பட்டு மருத்துவர்கள் உதவியுடன் வெட்டப்பட்டது. இந்த சம்பவம் எஸ்பிபி உறவினர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.