வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 31 ஜூலை 2024 (09:23 IST)

ஆர் ஜே பாலாஜி படத்துக்கு இசையமைக்கும் அனிருத்… டைட்டில் இதுதானாம்!

கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும்  குவித்தது. இதையடுத்து அதே தயாரிப்பு நிறுவனமான மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் மீண்டும் மணிகண்டன் நடிப்பில் லவ்வர் திரைப்படத்தைத் தயாரித்தது. இந்த படம் ஒரு நல்ல வெற்றியைப் பெற்றது.

இதையடுத்து மில்லியன் டாலர் புரொடக்‌ஷன் எனும் அந்நிறுவனம் அடுத்தடுத்து 5 பெரிய படங்களைத் தயாரிக்க உள்ளது. அதில் ஆர் ஜே பாலாஜி, சசிகுமார் மற்றும் அர்ஜுன் தாஸ் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்நிலையில் ஆர் ஜே பாலாஜி நடிக்கும் படத்தை இயக்குனர் பா ரஞ்சித்தின் இணை இயக்குனர் சித்தார்த் என்பவர் இயக்கவுள்ளாராம். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க ‘சொர்க்கவாசல்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஆர் ஜே பாலாஜியின் சினிமா வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தின் பட்ஜெட் 16 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது.