வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 14 டிசம்பர் 2019 (13:19 IST)

’குயின்’ ரம்யா கிருஷ்ணன்: எமோஜி வழங்கி டிவிட்டர் கவுரம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள குயின் இணையத்தொடர் இன்று வெளியாகியுள்ளது. 
 
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும், பிரசாத் முருகேசனும் ஒன்றிணைந்து 'குயின் ' என்று பெயரிடப்பட்ட இணையதளத் தொடர் ஒன்றை வழங்கியுள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை விவரிக்கிறது இந்த இணையத் தொடர். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். 
 
முன்னதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குயின் மற்றும் தலைவிக்கு  தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். எனினும் உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது. இந்நிலையில் இன்று எம்.எக்ஸ்.பிளேயரில் குயின் தொடர் வெளியாகியுள்ளது. 
பலரின் வரவேற்பை பெற்றுள்ள குயின் இணைய தொடர், டிவிட்டர் டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது. அதோடு டிவிட்டர் எமோஜியையும் பெற்றுள்ளது. விஜய், ரஜினி, சூர்யா ஆகியோருக்கு கிடைத்த டிவிட்டர் எமோஜி கவுரம் தற்போது ரம்யா கிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.