தீபாவின் மனுவுக்கு கௌதம் மேனனுக்கு கோர்ட் சம்மன் – ஜெயலலிதா பயோபிக்குக்குப் புது சிக்கல் !
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள குயின் தொடர் சம்மந்தமாக தீபா தொடர்ந்த மனுவுக்கு பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இயக்குனர் விஜய் இயக்கும் தலைவி என்ற படமும் பிரியதர்ஷினி என்ற இயக்குனர் இயக்கத்தில் த அயர்ன் லேடி என்ற திரைப்படமும் உருவாகி வருகிறது.
இவை மட்டுமல்லாமல் கௌதம் மேனன் மற்றும் பிரசாந்த் முருகேசன் ஆகியோரின் இயக்கத்தில் குயின் என்ற வெப் சீரிஸூம் உருவாகி டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஆனால் இந்த சீரிஸ் மற்றும் படங்கள் தொடர்பாக ஜெயலலிதாவின் ரத்த சொந்தமான தீபா ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கும், வாழ்க்கைக்கும் பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாக மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் தீபாவின் மனுவுக்கு பதிலளிக்க சொல்லி நீதிமன்றம் கௌதம் மேனன் தரப்புக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.