13 ஆண்டுகளுக்குப் பின் அஜித்தோடு இணையும் இசையமைப்பாளர்… ரசிகர்கள் உற்சாகம்!

Last Modified திங்கள், 21 செப்டம்பர் 2020 (12:16 IST)

அஜித் அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ள திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜி வி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் சில பெண் இயக்குனர்கள் அவ்வப்போது உருவாகி நல்ல பெயரை வாங்கினாலும், கமர்ஷியல் ரீதியாக பெரிய ஹீரோக்களை இயக்கும் அளவுக்கு யாரும் உருவாகவில்லை. அந்த குறையைப் போக்கியுள்ளார் சுதா கொங்கரா. சூர்யாவை வைத்து சூரரைப் போற்று இயக்கி முடித்துள்ள அவர் இப்போது அஜித்துக்கு கதை சொல்லி அவரின் சம்மதம் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் அந்த படத்தின் கதைப் பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கதைக்களம் வடசென்னை போன்ற ஒரு பகுதியாக இருக்கும் எனவும் அஜித் கேங்ஸ்டராக நடிக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. அஜித் கேங்ஸ்டராக நடித்து நீண்ட காலம் ஆகிவிட்ட நிலையில் இப்போது மீண்டும் அதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இசையமைப்பாளராக தன் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ்தான் வேண்டும் என சுதா கொங்கரா சொல்லியுள்ளதாக தெரிகிறது. இது மட்டும் உறுதியானால் 13 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் படத்துக்கு இசையமைக்க இருக்கிறார் ஜி வி பிரகாஷ். அஜித்தின் கிரீடம் படத்துக்கு கடைசியாக ஜி வி பிரகாஷ் இசையமைத்து இருந்தார்.இதில் மேலும் படிக்கவும் :