1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 2 அக்டோபர் 2020 (15:51 IST)

அஜித் படத்தின் கதாநாயகி அந்த நடிகரின் மனைவியா? இணையத்தில் தீயாய் பரவும் செய்தி!

அஜித் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு கதாநாயகியாக சாயிஷா தேர்வு செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் சில பெண் இயக்குனர்கள் அவ்வப்போது உருவாகி நல்ல பெயரை வாங்கினாலும், கமர்ஷியல் ரீதியாக பெரிய ஹீரோக்களை இயக்கும் அளவுக்கு யாரும் உருவாகவில்லை. அந்த குறையைப் போக்கியுள்ளார் சுதா கொங்கரா. சூர்யாவை வைத்து சூரரைப் போற்று இயக்கி முடித்துள்ள அவர் இப்போது அஜித்துக்கு கதை சொல்லி அவரின் சம்மதம் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் அந்த படத்தின் கதைப் பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கதைக்களம் வடசென்னை போன்ற ஒரு பகுதியாக இருக்கும் எனவும் அஜித் கேங்ஸ்டராக நடிக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. அஜித் கேங்ஸ்டராக நடித்து நீண்ட காலம் ஆகிவிட்ட நிலையில் இப்போது மீண்டும் அதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆர்யாவின் மனைவி சாயிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.