ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 23 டிசம்பர் 2020 (11:38 IST)

அவர் அளவுக்கு இறங்கி குத்தணும்! – கவர்ச்சி நடிகையை தேடும் புஷ்பா படக்குழு!

தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் படத்தில் ஒரு குத்து பாடலுக்கு ஆட கவர்ச்சி நடிகையை தீவிரமாக தேடி வருகிறதாம் படக்குழு.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் புதிய படம் “புஷ்பா”. செம்மரக்கட்டைகள் கடத்தல் தொடர்பான இந்த படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளிலும் தயாராகி வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தில் இடம்பெறும் ஒரு குத்துப்பாடலில் ஆட கவர்ச்சி நடிகையை தேடி வருகிறார்களாம் படக்குழுவினர். ஒரு குத்து பாடலுக்கே அதிக தொகை தருவதற்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் அல்லு அர்ஜுனுக்கு இணை கொடுத்து ஆட வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதாம்.

முன்னதாக அல்லு அர்ஜுன் நடித்த அல வைகுந்தபுரம்லோ படத்தின் புட்டபொம்மா பாடல் அவரது நடனத்திற்காக பிரபலம் ஆனது குறிப்பிடத்தக்கது.