வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2022 (10:20 IST)

புஷ்பா அப்டேட் கொடுத்த பஹத் பாசில்… ட்ரோல் செய்யும் ரசிகர்கள்… பின்னணி என்ன?

புஷ்பா படம் பற்றி நடிகர் பஹத் பாசில் சமீபத்தில் பேசியது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரூ.375 கோடிக்கு மேல் வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது.

இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா the Rule உருவாக உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் புஷ்பா 2 கதைக்களம் வெளிநாடுகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல் பாகத்தில் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளில் மட்டுமே வந்த பஹத் ஃபாசில் கதாபாத்திரம், அடுத்த பாகத்தில் அதிக முக்கியத்துவம் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக மொத்தமாக 100 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் பஹத் ஃபாசில்.

இந்நிலையில் சமீபத்தில் படம் பற்றி பேசியுள்ள பஹத் பாசில் “முதலில் படம் ஒரே பகுதியாகதான் எடுக்க இருந்தனர். ஆனால் இப்போது மூன்று பாகம் வரை எடுக்க அதற்குள் கதை இருப்பதாக இயக்குனர் சுகுமார் என்னிடம் கூறியுள்ளார்.” எனக் கூறியிருந்தனர். இந்நிலையில் சமூகவலைதளங்களில் சில ரசிகர்கள் பாகுபலி, கேஜிஎஃப் ஆகிய படங்களின் வெற்றியைப் பார்த்துதான் இந்த திரைப்படம் இரண்டாம் பாகம் எடுக்கும் முடிவை எடுத்துள்ளனர் என ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.