1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (07:36 IST)

புஷ்பா 2 படத்தில் இணையும் பிரபல தெலுங்கு நடிகை…!

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் படப்பிடிப்பு பல வெளிநாடுகளில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் பாகத்தில் இல்லாத சில புதிய நடிகர்கள் இரண்டாம் பாகத்தில் இணைய உள்ளதாக சொல்லப்படும் நிலையில் படத்தில் பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பாடல் முதல் பாகத்தில் சமந்தா நடனமாடிய ஊ சொல்றியா மாமா பாடல் போன்ற ஒன்றாக இருக்கும் என சொல்லப்படுகிறது.