1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 29 நவம்பர் 2024 (15:01 IST)

அடுத்தடுத்து நீக்கப்படும் கலைஞர்கள்… என்னதான் நடக்குது புஷ்பா 2 வில்?

புஷ்பா முதல் பாகத்தின் வெற்றி அதன் இரண்டாம் பாகத்தின் வணிக மதிப்பைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. அதனால் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். தற்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது. படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.

இன்னும் 10 நாட்களில் படம் ரிலீஸாகவுள்ள நிலையில் படத்துக்கான ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படம் 3 மணி நேரம் 21 நிமிடம் ஓடும் வகையில் எடிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக இந்த படத்தில் இருந்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டு அவருக்குப் பதில் பின்னணி இசைப் பணிகளை சாம் சி எஸ் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இப்போது இந்த படத்தில் இருந்து படத்தொகுப்பாளர் ரூபனும் நீக்கப்பட்டு நவீன் லூயி என்பவர் தற்போது படப்பிடிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.