வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (07:22 IST)

24 மணி நேரத்தில் 25 மில்லியன் பார்வையாளர்கள்: புஷ்பா டிரைலர் சாதனை!

24 மணி நேரத்தில் 25 மில்லியன் பார்வையாளர்கள்: புஷ்பா டிரைலர் சாதனை!
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா படம். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது 
 
இந்த படத்தின் டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் 25 மில்லியன் பார்வையாளர்கள் இந்த ட்ரெய்லரை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் சுமார் 8 லட்சம் லைக்ஸ்கள் 24 மணி நேரத்தில் இந்த டிரைலருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. செம்மரக்கட்டைகள் கடத்தல் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் அல்லு அர்ஜுன் மிக அபாரமாக நடித்துள்ளதாகவும் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருப்பதாகவும் டிரைலரை பார்த்தவர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது, ஆனால் அவர் எதிர்பாராத விதமாக நடிக்க முடியாததால் அவருக்கு பதிலாக பகத் பாசில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்