ஹேப்பி பர்த்டே தங்கமே.... வாழ்த்து மழையில் குக் வித் கோமாளி பவித்ரா!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மெகா ஹிட் அடித்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் புகழுக்கு ஜோடியாக இருந்த பவித்ரா லட்சுமி நிறைய ரொமான்டிக் காமெடி செய்து தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
பவித்ரா அவ்வப்போது திடீரென சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமந்தா போன்றே கெட்டப் போட்டு போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை பார்த்து அச்சு அசல் சமந்தாவை போலவே இருப்பதாக கூறி ட்ரெண்ட் ஆக்கினர். அத்தோடு புடவையை கத்திரிக்கோலால் கத்தரித்தபடி போஸ் கொடுத்து சூப்பர் ட்ரெண்ட் ஏகினார்.
சமீபத்தில் கூட தனது ட்விட்டர் பக்கத்தில் Take me up என கேப்ஷன் கொடுத்து பவித்ரா அக்கவுண்டில் இருந்து வெளியான ஒரு புகைப்படத்தை தூக்குவது போன்று நிறைய மீம்ஸ் போட்டு ட்ரெண்ட் செய்துள்ளனர். இந்நிலையில் இன்று தனது 27வது பிறந்தநாள் கொண்டாடும் பவித்ராவுக்கு புகழ், " ஹேப்பி பர்த்டே தங்கமே. கடைசிவரை நல்ல நண்பர்களாக இருப்போம் என இன்ஸ்டாவில் ஸ்டோரீஸ் போட்டுள்ளார். அத்துடன் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.