புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 14 ஜூன் 2021 (17:48 IST)

எடப்பாடி பழனிச்சாமி சிறைக்கு செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை: புகழேந்தி பேட்டி

பாமகவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தும் பேசிய புகழேந்தி சற்று முன்னர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதிமுகவின் பெங்களூர் நகர செய்தி தொடர்பாளராக இருந்த அவர் அதிரடியாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
அதிமுகவுக்கு சாதகமாகவும், பாமக மற்றும் அன்புமணி ஆகியோர்களை விமர்சனம் செய்த புகழேந்தி  நீக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தபோது ‘சர்வாதிகாரியாக செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி ஒரு நல்ல அரசியல் எதிரியை இனிமேல்தான் சந்திக்க உள்ளார் என்று தெரிவித்துள்ளார் 
 
மேலும் எடப்பாடி பழனிச்சாமி சிறைக்கு செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில் தற்போது புகழேந்தி நீக்கப்பட்டதன் மூலம் அவர் அதிமுகவுக்கு இன்னொரு எதிரியாக மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது