1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 9 மார்ச் 2022 (16:02 IST)

சிம்பு தொடர்ந்த வழக்கு: ரூ.1 லட்சம் அபாரதம் விதித்த நீதிமன்றம்!

சிம்பு தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கம் பதில் மனு தாக்கல் செய்யாததால் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது.
 
சிம்பு நடித்த  ’அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’  என்ற திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய தோல்வியடைந்தது. இந்த படத்தில் தனக்கு சம்பள பாக்கி இருப்பதாக சிம்புவும், இந்த படம் சிம்புவால் தான் நஷ்டம் ஏற்பட்டது என தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் வழக்குப்பதிவு செய்துள்ளனர் 
 
இந்த நிலையில் மைக்கேல் ராயப்பன் மீது சிம்பு மானநஷ்ட ஈடு வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கில் எதிர் மனுதாரராக நாசர் மற்றும் விஷால் சேர்க்கப்பட்டனர் 
 
இந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கம் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்பதால் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிப்பதாக சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது