1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 4 மார்ச் 2022 (18:31 IST)

சிம்புவுக்கும் வில்லனாகும் பகத் பாசில்: எந்த படத்தில் தெரியுமா?

பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் வில்லனாக நடித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக அவர் வில்லனாக நடித்த புஷ்பா படம் சூப்பர் ஹிட்டானது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் கமல்ஹாசனின் விக்ரம் உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் வகையில் தற்போது சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
 
சிம்பு நடிப்பில் கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’கொரோனா குமார்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தின் வில்லனாக பகத் பாசில் உறுதி செய்யப்பட்டுள்ளார்.
 
 ஏற்கனவே தமிழ் தெலுங்கு திரையுலகில் முக்கிய பிரபலங்களின் படங்களில் நடித்து வரும்  பகத்பாசில், தற்போது சிம்பு  படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது