ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 22 டிசம்பர் 2018 (19:46 IST)

தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்டவர்கள் மீது நடவடிக்கை உறுதி: விஷால் பேட்டி

தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால்  தெரிவித்துள்ளார். 


 
சென்னை தி.நகரில் உள்ள தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விஷால், சென்னை நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்தார்.   நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளதாக கூறிய விஷால் நீதித்துறையை கடவுளாக மதிப்பதாக கூறினார். 
 
தி.நகர் அலுவலகம் நாளை காலை 9.30 மணிக்கு திறக்கப்படும் என்று கூறிய விஷால்,  வேறு ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால் உறுப்பினர்கள் அலுவலகம் வந்து எங்கள் விளக்கத்தை தெரிந்து கொள்ளலாம்.
 
இளையராஜா நிகழ்ச்சிக்கு ஏன் தடைசெய்ய நினைக்கிறார் என்று தெரியவில்லை. இளையராஜா நிகழ்ச்சி கண்டிப்பாக நடத்தப்படும் என்றார்.  அதன் பிறகு செயற்குழு கூட்டம் நடைப்பெறும் என்றார்.