திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 7 மார்ச் 2018 (14:19 IST)

பிரபல இயக்குனரின் தந்தை மரணம்!

பிரபல தயாரிப்பாளர் பட்டியல்’சேகர்’ உடல்நலக் குறைவினால் சென்னையில் மரணமடைந்தார்.
 
அஜித் நடித்த பில்லா, ஆரம்பம் படத்தை இயக்கியவர் விஷ்ணுவர்தன். இவர் இயக்கிய பட்டியல் திரைப்படத்தையும், நடிகர் கிருஷ்ணாவின் கற்றது களவு மற்றும் அலிபாபா திரைபடத்தையும் தயாரித்தவர் பட்டியல் ‘சேகர்’.
 
அவர் கடந்த ஒரு வார காலமாக உடல்நலக் குறைவினால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 
 
இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது உடல் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. மேலும்  பட்டியல்’சேகர்’ விஷ்ணுவர்தன் மற்றும் நடிகர் கிருஷ்ணாவின் தந்தை என்பது குறிப்பிடதக்கது