திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 5 ஜூலை 2023 (07:37 IST)

சம்பளம் வாங்கிக்கொண்டு 9 ஆண்டுகளாக இழுத்தடிக்கும் ஹீரோ… தயாரிப்பாளர் புகார்!

கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் ஒரு பேன் இந்தியா திரைப்படத்தை தயாரிக்கிறார் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் தாணு. கிச்சா சுதீப்பின் 46 ஆவது படமாக உருவாகும் இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் ப்ரமோஷன் வீடியோ தற்போது வெளியாகி கவனத்தில் ஈர்த்துள்ளது.

இந்த படத்தை விஜய் கார்த்திகேயா இயக்க, காந்தாரா படத்தின் இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். தாணு விரைவில் சூர்யா- வெற்றிமாறன் கூட்டணியில் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது கிச்சா சுதீப் மேல் பிரபல கன்னட தயாரிப்பாளர், எம் என் குமார், புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் “8 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு படத்தில் நடிப்பதற்காக 9 கோடி ரூபாய் மொத்த சம்பளத்தையும் என்னிடம் பெற்றார் சுதீப். ஆனால் இன்னமும் எனக்கு அந்த படத்தை நடித்துத் தரவில்லை.  என் படத்துக்காக வைத்திருந்த தலைப்பான முத்தட்டி சத்யராஜு என்பதை இப்போது தாணு படத்துக்கு வைத்துள்ளார்.  அவர் மீது தென்னிந்திய வர்த்தக சபையில் நான் புகார் அளித்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.