1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 16 ஜூன் 2019 (10:25 IST)

விஜய் படத்தைத் தள்ளிப்போட்ட மோகன் ராஜா – பின்னணி என்ன ?

விஜய் நடிப்பில் தான் இயக்க இருக்கும் படம் தள்ளிப்போவது ஏன் என இயக்குனர் மோகன் ராஜா விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் விஜய் இப்போது அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விஜய் 63 என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். விஜய் 63 வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் அடுத்தப்படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

ஆனால் முன்னதாக விஜய்யின் அடுத்தப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்குவதாக பேச்சுகள் எழுந்தன. இந்நிலையில் விஜய்யின் படத்தைத் தான் இயக்குவது தாமதமாவது ஏன் மோகன் ராஜா விளக்கமளித்துள்ளார். அதில் ‘விஜய்யுடனான படம் தாமதமானதற்கு என்னுடைய தவறுதான் காரணம். படத்துக்காக விஜய் தயாராக இருக்கிறார். படம் பற்றி அடிக்கடி என்னிடம் கேட்டுத் தெரிந்துகொள்வார். தனி ஒருவன் இரண்டாம் பாகத்துக்குப் பிறகுதான் விஜய்யின் படத்தைத் தொடங்க வேண்டும் என்று நான் விடாப்பிடியாக இருந்துவிட்டேன். என்னால் படம் தாமதமாவதற்கு விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் தாமதமானாலும் நல்ல படமாக கொடுப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார்.