’’பிரச்சனைகள் தீர்ந்தது....நாளை ’சக்ரா’ ரிலீஸ் ’’விஷால் மகிழ்ச்சியில் டுவீட்

Sinoj| Last Updated: திங்கள், 22 பிப்ரவரி 2021 (18:06 IST)
நாங்கள் குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிடுகிறோம்..வாய்மையே வெல்லும் எனக்கூறி விஷால் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.
விஷால் நடித்த சக்ரா திரைப்படத்தின் மீது டிரைடண்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் விசாரணை சமீபத்தில் நடந்த போது ’சக்ரா’ திரைப்படத்தை வெளியிட சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. இதனால் இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது

இந்த நிலையில் சற்று முன் ’சக்ரா’ படத்திற்கு ஏற்பட்ட அனைத்து தடைகளும் நீக்கப்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து நாளை முதல் இந்த படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என்று விஷால் தனது டுவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நான் எப்போதும் எனது துறையில்
சில பிரச்சனைகளை எதிர்கொண்டுவருகிறேன். சக்ரா படத்திற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடைநீக்கப்பட்டுள்ளது. எனவே நாளை உலகம் முழுவதும் ( பிப்-19 ஆம் தேதி)சக்ரா, தமிழ், மலையாளம்,தெலுங்கு,மற்றும் கன்னட மொழியில் வெளியாகிறது.


ஒரு தயாரிப்பாளராக மட்டுமின்றி இப்படத்தில் சம்பவத்தோடு சம்பத்தப்பட்டுள்ள அனைவர் சார்பிலும் இத்தடை உத்தரவு நீக்கத்திற்காக மதியாதைக்குரிய
நீதிமன்றத்திற்கு நன்றி.


நாங்கள் குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிடுகிறோம்..வாய்மையே வெல்லும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் விஷால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்இதில் மேலும் படிக்கவும் :