1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 25 பிப்ரவரி 2021 (07:49 IST)

அந்தகன் படத்தில் இருந்து இயக்குனர் விலகலா? பரபரப்பு தகவல்!

அந்தகன் படத்தில் இருந்து இயக்குனர் ஜே ஜே பிரட்ரிக் விலகியுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’அந்தாதூன்’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார் . அந்தகன் என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த படத்தை அவரது தந்தை தியாகராஜன் தயாரிக்கும் பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜே ஜே பிரட்ரிக் இயக்க ஒப்பந்தமானார். இந்த படத்தின் ப்ரோமோவை கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிட்டது படக்குழு. 

ஆனால் இன்னமும் படப்பிடிப்பு தொடங்கவில்லையாம். இந்நிலையில் அந்த படத்தின் இயக்குனர் ஜே ஜே பிரட்ரிக் விலகியுள்ளதாக ஒரு செய்தி பரவ ஆரம்பித்துள்ளது. இதற்குக் காரணம் தயாரிப்பாளர் தியாகராஜன் இயக்கத்தில் அதிகமாக குறுக்கீடு இருப்பதே காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த செய்தி வதந்தி என்றும் சொல்லப்படுகிறது.