வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : புதன், 25 ஆகஸ்ட் 2021 (17:42 IST)

சல்மான்கானை தடுத்து நிறுத்திய வீரருக்கு பரிசு !

இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டார் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சித் தொகுப்பாளாருமான நடிகர் சல்மான் கானை தடுத்து நிறுத்திய சி.ஐ.எஸ்.எஃப் வீரருக்கு  பரிசு வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடிகர் சல்மான் கான் மும்பை விமான நிலையத்திற்குள் நுழைந்த போது, சில பாதுகாப்புக் காரணங்களைக் கருதி, நடிகர் சல்மான் கானை சி.ஐ.எஸ்.எஃப் வீரர் தடுத்து நிறுத்தினார்.

இந்நிலையில் தனது பணியில் சிறப்பாகப் பணியாற்றியதர்காக சி.ஐ.எஸ்.எஃப் வீரருக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சி.ஐ.எஸ்.எஃப் வீரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.