உங்க அம்மா தங்கச்சிக்கு ஒன்னுன்னா சும்மா விடுவீங்களா… பெண்கள் பாதுகாப்பு குறித்து பிரியங்கா மோகன்!
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளில் இப்போது பிரியங்கா மோகன் ஈடுபட்டு வருகிறார். அது சம்மந்தமான ஒரு நேர்காணலில் “இந்த படத்தில் ஒரு போராளியாக உண்மையான துப்பாக்கியை தூக்கி நடித்தேன். ஆனால் அதில் இருந்த புல்லட்கள் எல்லாம் போலிதான். துப்பாக்கியை இயக்க எனக்கு பயிற்சி கொடுத்தனர்” எனக் கூறியுள்ளார்.
மேலும் பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு “ஆண்- பெண் என இருவரும் சமமான பாதுகாப்பை உணரவேண்டும். அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். உங்க வீட்ல உங்க அம்மா, தங்கச்சிக்கு ஒரு பிரச்சனன்னா சும்மா விடுவீங்களா? அப்புறம் ஏன் நீங்க ஒரு பெண்ணுக்கு தப்பான விஷயத்தை செய்றீங்க” எனக் கூறியுள்ளார்.