1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2024 (12:36 IST)

பாலியல் சீண்டல்..தனுஷ் ரசிகருக்கு தர்ம அடி கொடுத்த நடிகை

captain miller function
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ். இவர் நடிப்பில், அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேப்டன் மில்லர்.

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து, பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்திப் கிஷன், நிவேத்தா சதீஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிவி, பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா  நேற்று சென்னை உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இதில், தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.  இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ரகுபதி சிறிய கேரக்டரில் நடித்துள்ளதால் அவரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சி முடிந்த பின், தனுஷை பார்க்க ரசிகர்கள் கூட்டமாக சென்றுள்ளனர். அந்த நெரிசலில் அங்கு அமர்ந்திருந்த ஐஸ்வர்யாவிடம் ரசிகர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது. அந்த நபரை பிடித்து காலில் விழும்படி கூறி அடித்துள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவலாகி வருகிறது.