புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : செவ்வாய், 24 டிசம்பர் 2019 (11:25 IST)

இந்த ஒரே ஒரு திருமணத்தில் மூன்று மாத வருமானம் வந்துவிட்டது - ஹோட்டல் தரப்பு தகவல்!

உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டுக்குச் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
 
இவர் கடந்த டிசம்பர் 1 ம் தேதி தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டார்.  நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உமைத் பவன் அரண்மனையில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்து. இவர்களின் இந்த ஒரே ஒரு நாள் திருமணத்தால் மட்டும் மூன்று மாதங்களுக்கு தேவையான வருமானத்தை ஹோட்டல் நிர்வாகம் பெற்று விட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது. 
 
இது குறித்து இந்திய ஹோட்டல் கம்பெனிகள் தலைமை அதிகாரியான புனித் சட்வால் தெரிவிக்கையில்,  கடந்த ஆண்டு பிரியங்கா சோப்ராவின் திருமணம் உமைத் பவனில் நடைபெற்றது. இந்த திருமணத்தின் மூலம் மாதங்களுக்கு தேவையான வருமானத்தை அந்த ஹோட்டல் நிறுவனம் பெற்றுள்ளது. தும்மட்டுமின்றி ஒரு சில ஊடங்களும் பிரியங்கா சோப்ராவின் திருமணத்திற்காக 4 லட்சத்து 61 ஆயிரம் டாலர்கள் செலவழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. அதாவது இந்த மதிப்பின்படி கணக்கிட்டு பார்த்தால்  3,28,60,080 ரூபாய் ஆகும்.