புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (14:31 IST)

விஜய் ஏற்படுத்திய தாக்கம் குறிப்பிடத்தக்கது – பிரியங்கா சோப்ரா புகழாரம்!

நடிகை பிரியங்கா சோப்ரா தன் முதல் படத்தின் கதாநாயகனான விஜய்யை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

பாலிவுட்டில் தொடங்கி ஹாலிவுட் வரை தற்போது பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ப்ரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் மட்டும் நடித்துள்ளார். தொடர்ந்து குவாண்டிகோ உள்ளிட்ட ஹாலிவுட் தொடர்களில் நடித்து பிரபலமடைந்த ப்ரியங்கா சோப்ரா பிரபல ஹாலிவுட் நடிகரும், பாடகருமான நிக் ஜோனாஸை மணம் முடித்தார். நிக் ஜோனாஸ் ப்ரியங்கா சோப்ராவை விட மிகவும் வயது குறைந்தவர் என்பது அந்த சமயம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால் அவர் முதன் முதலாக நடித்தது ஒரு தமிழ்ப்படத்தில்தான். விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்த அவர் அதன் பின்னர் வேறு எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்கவே இல்லை. இந்நிலையில் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் அவர் ‘விஜய்யுடன் தமிழன் படத்துக்காக வெளிநாடுகளில் பாடல் காட்சிகளில் நடிக்க சென்ற போது 15 மணிநேரம் அவரைப் பார்க்க ரசிகர்கள் காத்திருப்பார்கள். ஷுட் முடித்துவிட்டு அவர் அத்தனை பேருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டு அதன் பின்னர்தான் செல்வார். அவர் அன்று என்னுள் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது’ என்று கூறியுள்ளார்.