1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வியாழன், 20 செப்டம்பர் 2018 (17:22 IST)

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட பிரியங்க சோப்ரா...

மனதைரியமும், முயற்சியும் இருந்தால் வெல்லாம் என்பதுக்கு பிரியங்கா சோப்ரா ஒரு உதாரணம்.


ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரியங்கா சோப்ரா, மிகுந்த மனதைரியத்துடன் குத்து சண்டை பெண் வீராங்கனையான மேரிகோம் பட கதாபாத்திரத்திற்காக கடுமையான உடற்பயிற்சி செய்து நடித்து பெரும் பாராட்டை பெற்றார். ஆஸ்துமா நோய்க்கு  பிரியங்கா சோப்ரா, ஒருபுறம் சிகிச்சை ஒருபக்கம் எடுத்துக்கொண்டாலும், மறுபுறம் திரைப்படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். 
 
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிககை பிரியங்கா சோப்ரா,  ஹாலிவுட், பாலிவுட்டில் பிஸியாக உள்ளார். அடுத்த ஆண்டு இறுதியில் தனது காதலர் நிக் ஜோன்ஸை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
 
ஆஸ்துமா பாதிப்பு குறித்து பிரியங்காவே சமீபத்தில் அளித்த பேட்டியில்  கூறுகையில், ‘என்னைப்பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு நான் ஆஸ்துமா பாதிப்புடையவர் என்பது தெரியும். இதை ஏன் மறைக்க வேண்டும்? அதனால்தான் வெளிப்படையாக பேசுகிறேன். ஆஸ்துமா என்னை தன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு செல்வதற்குமுன் ஆஸ்துமாவை என் கட்டுப்பாட்டுக்குள் நான் கொண்டு வந்துவிட்டேன்.
 
அதுதான் எனது வெற்றி. எப்போதும் என் கையில் ஒரு இன்ஹெலர் (மூச்சுவிடும் சிரமத்தை குறைக்கும் கருவி) இருக்கும். அது இருக்கும் வரை எனது லட்சியத்தையோ, வாழ்க்கையையோ, சாதனைகளையோ தடுத்து நிறுத்த முடியாது’ என்கிறார் பிரியங்கா சோப்ரா.
 
Priyanka chopra, Asthma, பிரியங்கா சோப்ரா, ஆஸ்துமா, சிகிச்சை, நோயாளி