வியாழன், 16 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (08:15 IST)

பிரியா பவானி சங்கர் நடிக்கும் வெப் தொடர் ‘தூதா’… ரிலீஸை ஒத்திவைத்த ப்ரைம் வீடியோ!

இயக்குனர் விக்ரம் குமார் இயக்க உள்ள புதிய வெப் தொடரில் கதாநாயகியாக நடிக்க பிரியா பவானி சங்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இப்போது தெலுங்கிலும் கால்பதித்துள்ள அவர் அங்கு இயக்குனர் விக்ரம் குமார் இயக்கியுள்ள ‘தூதா’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடரில் நாக சைதன்யா, பூ பார்வதி உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

ஷூட்டிங் எல்லாம் முடிந்து டிசம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆவதாக இருந்த இந்த வெப் தொடர் இப்போது சில காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டியுள்ளதால் ரிலீஸை அடுத்த் ஆண்டுக்கு தள்ளிவைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.