1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 17 மே 2021 (15:10 IST)

பணக்காரர்கள், ஏழைகள் எல்லோரும் ப்ளீஸ்... பிரியா பவானியின் எமோஷனல் பதிவு!

சிவகார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா என்ற திரைப்படத்தை இயக்கிவரும் கபாலி. தர்பார் பைரவா உள்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவருமான அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
 
சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு திடீரென அவர் காலமானார். இதனை அடுத்து திரையுலகினர் அருண் ராஜா காமராஜ் அவர்களின் குடும்பத்துக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகை பிரியா பவானி ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில்,  “வருத்தமளிக்கிறது. ஒவ்வொரு நாள் தொடங்கும் போதும் வாழ்வை இழக்கும் சோகமான செய்தியாக இருக்கிறது. 
 
இதில் என்னவென்றால்,  யாருக்கு வேணாலும் ஏற்படக்கூடும். நீங்கள், நான், நம் அன்புக்குரியவர்கள், பணக்காரர்கள், ஏழைகள் என எல்லோரும் ப்ளீஸ் பாதுகாப்பாக இருங்கள். இது ஒருபோதும் நடக்கவில்லை என்று நான் விரும்புகிறேன், அருண்ராஜா காமராஜுக்கு பலத்தையும் தைரியத்தையும் அளிக்கும்படி கடவுளை மனதார வேண்டிக்கொள்கிறேன் என மனமுருகி பதிவிட்டுள்ளார்.