1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2022 (16:19 IST)

டிமாண்டி காலணி படத்தின் இரண்டாம் பாகம்… கதாநாயகி ஆகும் பிரியா பவானி சங்கர்?

அருள்நிதி நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான திரைப்படம் டிமாண்டி காலணி.

தமிழ் சினிமாவில் பேய் படங்களின் டிமாண்ட் உச்சத்தில் இருந்தபோது வெளியாகி கவனத்தை ஈர்த்த படம் தான் டிமாண்ட்டி காலணி. இந்த படத்தில் அருள்நிதி, சனத் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருந்த நிலையில் அறிமுக இயக்குனரான அஜய் ஞானமுத்து இயக்கி இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் பெரும்பாலான காட்சிகள் ஒரு வீட்டுக்குள்ளாகவே படமாக்கி முடிக்கப்பட்டு வெளியான இந்த படம் நல்ல வசூலைக் குவித்தது.

இந்த படத்தின் வெற்றியால் இயக்குனர் அஜய் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கிறார். இந்நிலையில் இப்போது டிமாண்டி காலணி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இரண்டாம் பாகத்திலும் அருள்நிதியே நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு அஜய் ஞானமுத்து திரைக்கதை மட்டுமே எழுத உள்ளதாக சொல்லப்படுகிறது. இயக்குனர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.  முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் சம்மந்தம் இருக்காது என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் முதல் பாகத்தில் கதாநாயகி இல்லாத நிலையில் இரண்டாம் பாகத்தில் கதாநாயகிக்கி முக்கியத்துவம் கொடுத்து கதை உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த வேடத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.