வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: வியாழன், 12 ஏப்ரல் 2018 (10:36 IST)

எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் பிரியா பவானிசங்கர்

எஸ்.ஜே.சூர்யாவுடன் புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்கிறார் பிரியா பவானிசங்கர். 
வில்லன், ஹீரோ என இரண்டு வகையான கேரக்டர்களிலும் மாறி மாறி நடித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. செல்வராகவன் இயக்கத்தில் அவர் ஹீரோவாக நடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. தற்போது அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ‘இறவாக்காலம்’ படத்தில் நடித்து  வருகிறார். இரண்டுமே திரில்லர் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், ‘ஒருநாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்திலும் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா. அவருக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்கிறார். தற்போது கார்த்தியுடன் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்துவரும் பிரியா, அடுத்து ஈனாக் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்கிறார்.