ரஜினிக்கு பிரபல நடிகர் எழுதிய மன்னிப்பு கடிதம்: ஒரு நெகிழ்ச்சியான தகவல்

Last Modified செவ்வாய், 24 டிசம்பர் 2019 (23:02 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு தானாக தேடி வந்ததும் அந்த வாய்ப்பை பிரபல நடிகர் ஒருவர் மிஸ் செய்துவிட்ட தகவல் தற்போது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு இயக்குனருமான மலையாள நடிகரும் இயக்குனருமான பிருதிவிராஜ் என்பவரிடம் அவர் ஒரு கதையைக் கேட்டார். அந்த சமயத்தில்தான் பிரித்விராஜன் இயக்கிய ‘லூசிஃபர்’ சூப்பர்ஹிட் ஆகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்விராஜ் கூறிய கதையில் நடிக்க ரஜினி ஆலோசனை செய்து கொண்டிருந்தபோது திடீரென பிரித்திவிராஜ் வேறு ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த நிலையில் திடீரென ஒருநாள் ரஜினியிடமிருந்து அந்த படத்தை இயக்க அழைப்பு வந்ததாகவும் ஆனால் தான் வேறு ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி விட்டதால் தன்னால் தற்போது இயக்க முடியாது என்று ரஜினியிடம் கூறிவிட்டதாகவும் நேற்று நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் பிரித்திவிராஜ் மனம் திறந்து கூறினார்

மேலும் இதுவரை தான் யாருக்கும் மன்னிப்பு கடிதம் எழுதியதே இல்லை என்றும் ஆனால் தன்னுடைய நிலையை விரிவாக விளக்கி ரஜினி அவர்களுக்கு ஒரு மன்னிப்பு கடிதம் பிராயசித்தமாக எழுதியதாகவும் அவரும் பெருந்தன்மையுடன் அதை ஏற்றுக் கொண்டதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்


இதில் மேலும் படிக்கவும் :