ஒவ்வொரு பேரனுக்கும் ரூ.90 கோடி: ரஜினி எழுதி வைத்த சொத்து

Last Modified செவ்வாய், 24 டிசம்பர் 2019 (21:56 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது ஒரு படத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ஒப்பந்தமான ‘தலைவர் 168’ படத்தின் சம்பளம் ரூ.100 என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் அவர் தன்னுடைய பேரன்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 90 கோடி மதிப்புள்ள பணத்தை பிக்சட் டெபாசிட்டில் டெபாசிட் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு 3 பேரன்கள் உள்ளனர். ஐஸ்வர்யா தனுஷுக்கு இரண்டு குழந்தைகளும், சௌந்தர்யாவுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்த மூன்று பேருக்கும் மிகப்பெரிய அளவில் ஏதாவது செய்யவேண்டும் என்றும் சமீபத்தில் முடிந்த முடிவு செய்த ரஜினிகாந்த், ஒவ்வொரு பேரனின் பெயரில் ரூபாய் 25 கோடி ரூபாய் வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்துள்ளாராம்
இந்த பணம் இவர்கள் மூவரும் 28 வது வயதை அடையும் போது ரூபாய் 90 கோடி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மட்டுமே சொத்துக்களை எழுதி வைக்கும் வழக்கம் உண்டு. ஆனால் ரஜினி இரண்டு மகள்களுக்கும் ஏற்கனவே கோடிக்கணக்கில் சொத்துக்களை அளித்துள்ள போதிலும் தற்போது பேரன்களுக்கும் கோடிகளை வாரி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :