ஓணம் பண்டிகை கொண்டாட்டம்… ஓடிடியில் ரிலீஸாகும் பிருத்விராஜின் குருதி!
குருதி திரைப்படம் ஓடிடியில் நேரடியாக ரிலீஸாக உள்ளது.
கேரளாவில் இன்னும் கொரோனா பாதிப்பு முழுமையானக் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இதனால் அங்கு திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து எந்த தீர்மானகரமான முடிவும் இல்லை. இதனால் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ள படங்கள் எல்லாம் ஓடிடியில் ரிலிஸாகி வருகின்றன. அந்த வகையில் திருஷ்யம் மற்றும் மாலிக் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன.
இந்நிலையில் பிருத்விராஜ் நடிப்பில் மனுவாரியர் இயக்கியுள்ள குருதி என்ற திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஓணம் பண்டிகையை ஒட்டி அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.