திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 10 ஏப்ரல் 2024 (10:23 IST)

ஆடு ஜீவிதம் படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்… ரிலீஸ் எப்போது?

மலையாள இலக்கியத்தில் பெரும் கவனத்தை ஈர்த்த படைப்பு பென் யாமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’  நாவல். இந்த நாவல் தமிழுலும் மொழி பெயர்க்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் பிருத்விராஜ், அமலா பால் ஆகியோர் நடிக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க ப்ளஸ்ஸி இயக்கியுள்ளார். 8 ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த இந்த திரைப்படம் மார்ச் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

கேரளாவில் இருந்து அரபு நாட்டுக்கு வேலைக்கு செல்லும் ஒரு இளைஞன் அங்கு ஆடு மேய்ப்பவராக பாலைவனத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளால் அவர்  வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதே ஆடு ஜீவிதம் படத்தின் கதை. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், மலையாள சினிமாவில் 100 கோடி ரூபாயை விரைவாக வசூல் செய்த படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும், மே மாதத்தில் ஸ்ட்ரீம் ஆகும் எனவும் சொல்லப்படுகிறது.