புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 11 மார்ச் 2024 (07:05 IST)

சூப்பர் ஹிட் படமான பிரேமலு தமிழிலும் வருகிறது… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தென்னிந்திய சினிமாத் துறைகளில் மிகவும் ஆரோக்யமாக உள்ள மாநிலமாக கேரளா விளங்குகிறது. அங்குதான் முன்னணி நடிகர்களின் மாஸ் படங்களூம் ஹிட்டாகின்றன. நல்ல கதையம்சத்தோடு பெரிய நடிகர்கள் இல்லாமல் வரும் படங்களும் ஹிட்டாகின்றன. அப்படி ஹிட்டாகும் படங்கள் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்படுகின்றன.

கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் அங்கு வெளியான பிரேமலு, ப்ரமயுகம் மற்றும் மஞ்சும்மள் பாய்ஸ் ஆகிய மூன்று திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. இதில் மிகச்சிறிய பட்ஜெட்டில் முழுக்க முழுக்க இளம் நடிகர்களை வைத்து உருவான பிரேமலு திரைப்படம் 70 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மலையாள வெர்ஷனிலேயே அந்த படம் தமிழகத்திலும் கலக்கிய நிலையில் இப்போது தமிழ் டப்பிங் வெர்ஷன் மார்ச் 15 ஆம் தேதி முதல் வெளியாக உள்ளது.