திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 24 ஆகஸ்ட் 2019 (09:59 IST)

குழந்தையின் உடலை வாங்காமல் தலைமறைவானப் பெற்றோர் – பின்னணி என்ன ?

கர்நாடக மாநிலத்தில் மருத்துவமனையில் இறந்த குழந்தையின் உடலை பெற்றுக்கொள்ளாமல் பெற்றோர் ஒருவர் தலைமறைவாகியுள்ளனர்.

கர்நாடகா மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள ஹூப்ளி நகரத்தைச் சேர்ந்தவர்கள் தாதாபீர் சேஜ் மற்றும் பூஜா தாகூர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் இருந்தார். அவருக்குத் திடீரென உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அருகில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சேர்த்துள்ளனர்.

இதையடுத்து மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு சில நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அந்த குழந்தை சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளது. அதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் குழந்தையின் உடலை உடற்கூறாய்வு முடிந்ததும் வாங்கிக் கொள்ள சொல்லியுள்ளது. ஆனால்,  அவர்கள் இருவரும் குழந்தையின் உடலை வாங்கமலேயே அங்கிருந்து தலை மறைவாகியுள்ளனர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் போலிஸுக்குத் தகவல் அளிக்க போலிஸார் தம்பதிகளின் ஊருக்கு சென்று அவர்களைப் விசாரிக்க இருவரும் ஊரைக் காலி செய்துவிட்டு சென்றுள்ளனர்.

ஊரில் அவர்களைப் பற்றி விசாரித்ததில் தாதாபீர் சேக் ஒரு ரவுடி என்று சிலரும், பிணத்தை அடக்க செய்ய முடியாத வறுமையான நிலையில் இருந்ததாகவும் அதனால்தான் இருவரும் ஊரை விட்டு ஓடிவிட்டனர் என்று மற்றொரு தரப்பும் கூறியுள்ளனர்.