ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 4 ஏப்ரல் 2022 (09:35 IST)

பீஸ்ட் டிரைலரைப் பற்றி கேஜிஎப் இயக்குனரின் டிவீட்… நெல்சன் நன்றி!

பீஸ்ட் படத்தின் டிரைலர் இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

நடிகர் விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் ஏப்ரல் 13 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை ட்ரெய்லர் வெளியானது.

இந்த டிரைலருக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்து வருகிறது. இந்நிலையில் டீசரைப் பற்றி கேஜிஎப் 2 இயக்குனர் பிரசாந்த் நீல் ‘வாவ்… எப்போதையும் விட சிறந்தது. டிரைலர் அமேசிங்காக இருக்கிறது.’ எனக் குறிப்பிட்டு டிவீட் செய்திருந்தார்.இதைப் பகிர்ந்துள்ள நெல்சன் ‘நன்றி… உங்களுக்கு டிரைலர் பிடித்ததில் மகிழ்ச்சி’ எனக் கூறியுள்ளார். பீஸ்ட் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.