“கமல் சாரால் மட்டுமே அது சாத்தியம்” – பிரசன்னா
கமல் சாரால் மட்டுமே அது சாத்தியம்’ என நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.
விஷாலுடன் பணியாற்றுபவராக பிரசன்னா நடித்த ‘துப்பறிவாளன்’ இன்னும் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து ரிலீஸாக உள்ள ‘திருட்டுப்பயலே’ இரண்டாம் பாகத்தில், வில்லனாக நடித்திருக்கிறார் பிரசன்னா.
“தற்போது மக்களுக்கு க்ரே ஷேட் பிடித்திருக்கிறது. அதேசமயம், சினிமாவைப் பார்த்து சமூகம் கெட்டுப்போவதாகவும் சொல்கிறார்கள். ஒருவன் கெட்டவனாக இருந்தால், அவன் நிச்சயம் பாக்கு போடுவான், சிகரெட் அடிப்பான். அதை எப்படி திரையில் காட்டாமல் இருக்க முடியும்? கமல் சார் பல வருடங்களுக்கு முன்பே திரையிலும், நிஜத்திலும் சிகரெட் பிடிப்பதை நிறுத்துவிட்டார். எத்தனை பேரால் அவர் மாதிரி நிறுத்த முடியும்? வெப் சீரியல்கள் கொஞ்சம் சுதந்திரம் தருகின்றன. ‘மாரி’ படத்தை இயக்கிய பாலாஜி மோகனின் வெப் சீரியல், புதிதாக ஒரு விஷயத்தைப் பார்த்த புத்துணர்ச்சி தந்தது” என்கிறார் பிரசன்னா.