1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 8 அக்டோபர் 2017 (10:07 IST)

உடல் நிலை பாதிப்பு - கமல்ஹாசனுக்கு என்ன ஆச்சு?

நடிகர் கமல்ஹாசனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து அவரின் நிகழ்ச்சிகள் 2 நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


 

 
நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியலுக்கு வருவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக தனது நற்பணி மன்ற நிர்வாகிகளிடமும் அவர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். மேலும், வருகிற நவம்பர் 7ம் தேதி தனது பிறந்தநாளன்று அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில், அவருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும், இருமல் மற்றும் தொண்டை வலியால் அவர் அவதிப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, இரண்டு நாட்களுக்கு அவரின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.