இப்போ நிம்மதியா தூங்குவேன்; புயல் வரும் முன்னே பிரகாஷ் ராஜ் செய்த செயல்! – குவியும் பாராட்டுகள்!

Prakash Raj
Prasanth Karthick| Last Modified வியாழன், 26 நவம்பர் 2020 (13:02 IST)
தமிழகத்தில் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்கள் நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் கோவளத்தில் உள்ள மக்களுக்கு அடைக்கலம் அளித்துள்ளார்.

வங்க கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை காரைக்கால் அருகே கரையை கடந்த நிலையில் நாகப்பட்டிணம் முதல் சென்னை வரை 7 மாவட்டங்கள் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக புயல் ஆபத்துள்ள பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
prakashraj

இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் சென்னை அருகே உள்ள கோவளம் கடற்கரை பகுதி மக்களை தனது பவுண்டேஷன் மூலம் தங்க வைத்து உணவு அளித்து உதவியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “இப்போதான் நிம்மதியா தூங்க போறேன். குறைந்த பட்சம் என்னை சுற்றியுள்ள ஒரு சிலருக்காவது என்னால் இயன்றதை செய்துள்ளேன். நீங்கள் மக்களுக்கு செய்த உதவியை பகிர்ந்து கொள்ளுங்கள்” என கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :