திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 7 நவம்பர் 2023 (13:25 IST)

’நல்லா இருங்க’, தீர விசாரிப்பதே மெய்.. கமல்ஹாசனுக்கு பிரதீப்பின் பிறந்தநாள் வாழ்த்து..!

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதீப், தனது சமூக வலைதள பக்கத்தில் ’நல்லா இருங்க தீர விசாரிப்பதே மெய்’ என்ற ஹேஷ்டேக் பதிவு செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் நான் ஒரு தீவிர கமல் ரசிகன் என்றும் உண்மைதான் சொல்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடித்த ஒரு காட்சியின் வீடியோவையும் அவர் பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில் யாராவது வேணும்னு செய்வாங்களா? ஆனா நான் செய்வேன் என்று கமல்ஹாசன் பேசும் வசனம் அதில் உள்ளது. அது கிட்டத்தட்ட பிரதீப்பின் குணத்தை ஒட்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரதீப்பை கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றியது அநியாயமானது என சமூக வலைதளத்தில் கூறப்பட்டு வரும் நிலையில் தீர விசாரிப்பதே மெய் என்ற ஹேஷ்டேக் போட்டு பிரதீப் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


Edited by Siva