வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 5 நவம்பர் 2023 (08:09 IST)

பிக்பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் திடீர் வெளியேற்றம்.. கமல்ஹாசனை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட பிரதீப் ஆண்டனி, திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதால் நெட்டிசன்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பிரதீப் பிக் பாஸ் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து கமல்ஹாசன் ஒவ்வொரு போட்டியாளரிடம் பிரதீப் குறித்து கேட்டபோது கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களும் பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று கூறினர்.

அர்ச்சனா உட்பட ஒரு சிலர் மட்டும் தான் பிரதீப்புக்கு ஆதரவாக பேசினார். இந்த நிலையில் பெரும்பாலான போட்டியாளர்களின் கருத்துக்களின் அடிப்படையில் பிரதீப்பை வெளியேற்றுவதாக கமல்ஹாசன் கூறினார்.  

பிரதீப் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவரிடம் ஒரு விளக்கம் கூட கேட்கவில்லை என்பதால் கமல்ஹாசனை நெட்டிசன்கள் இணையதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு மோசமான முடிவை கமல்ஹாசன் எடுத்து விட்டார் என பெரும்பாலான ஒரு கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்

Edited by Siva